Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திற்கமைய யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் 2012ம் ஆண்டு „ஈழத்து திறமைகள் – Tamil Eelam’s Got Talent' என்ற நிகழ்வு முதல் முறை இடம்பெற்றது.

எம்மவரின் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை தொடர்ந்தும் வளரத்தெடுப்பதற்காக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் „ஈழத்து திறமைகள்' என்ற நிகழ்வு இரண்டாம் முறையாக 21.12.2013 அன்று பிராங்போர்ட் (Frankfurt) நகரத்தில் பிரமாண்டமான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இப்போட்டிநிகழ்வில் தனி நடனம், குழு நடனம், பாடல் என்று பல நிகழ்வுகள் இடம்பெற்றன. „ஈழத்து திறமைகள்' என்ற போட்டி நிகழ்வில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர் தாயகம் நோக்கிய கலை நிகழ்வுகளை அரங்கில் நிகழ்த்தி மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கினார்கள்.

முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் கேடையம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புகைப்படங்களை www.facebook.com/TamilYouthOrganisationGermany அல்லதுwww.tyo-germany.com  என்ற எமது இணையத்தள முகவரியில் காணலாம்.

0 Responses to யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் நடத்திய ''ஈழத்து திறமைகள் 2013''

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com