Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருவண்ணாமலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், கொலை செய்து உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் காந்திமதி (38). ஆசிரியரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.

அதன்பின்னர் காந்திமதி சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பரமசிவம் (40) என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். பரமசிவம் தனியார் கம்பெனியில் தலைமை கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

பணியிட மாறுதல் காரணமாக காந்திமதி பொன்னேரி அருகே உள்ள நெடும்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மாறுதலாகி அங்கு வேலையில் சேர்ந்தார்.

45 நாட்களுக்கு முன்னர் பொன்னேரி அருகே உள்ள காரனோடை பஜார் தெருவில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். இந்நிலையில் 2 நாட்களாக பரமசிவத்திடம் இருந்து போன் வரவில்லை என்று சந்தேகப்பட்ட அவரது உறவினர்கள் காரனோடைக்கு வந்தனர்.

அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது குளியல் அறையில் எரிந்த நிலையில் இரு கால்கள் மட்டும் இருந்தது. இதுபற்றி அவர்கள் சோழவரம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், பொன்னேரி துணை சூப்பிரண்டு எட்வர்ட், இன்ஸ்பெக்டர்கள் பாலு, ரமேஷ், சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் மனைவியை அடித்துக் கொலை செய்து 3 துண்டுகளாக்கியதை பரமசிவம் ஒப்புக்கொண்டார்.

பொலிசாரிடம் பரமசிவம் அளித்த வாக்குமூலத்தில், எங்கள் இருவருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அவரை தாக்கியதில் அவர் இறந்து போனார். அதன் பின்னர் உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினேன். பின்னர் உடலை 3 துண்டுகளாக அறுத்து ஒரு பகுதியை வீட்டில் வைத்துவிட்டு, இடுப்பு, கைகள் அடங்கிய மற்றொரு பகுதியை செம்புலிவரத்தில் உள்ள புதரில் வீசினேன், தலை பகுதியை சென்னை யானைக்கவுனி பாலத்தின் கீழ் வீசினேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிசார் பரமசிவத்தை அழைத்துக் கொண்டு சென்னை யானைக்கவுனி பாலத்தின் கீழ் பிளாஸ்டிக் பையில் இருந்த தலையையும், செம்புலிவரத்தில் இருந்த உடல் பகுதியையும் மீட்டனர். வீட்டில் இருந்த கால் பகுதியையும் பொலிசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து பொலிசார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 Responses to நடத்தையில் சந்தேகம்: உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com