இந்திய துணை தூதர் தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கடந்த 12ம் திகதி அமேரிக்க போலீசாரால் அதிரடியாக கைது செய்யப் பட்டு, அவமானகரமான சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கா இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மனிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத்தும், தேவயானி மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்று சல்மான் குர்ஷித்தும் கூறியிருந்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள அந்நாட்டு அரசின் துணை செய்தித் தொடர்பாளர், தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பும் கேட்க முடியாது, வழக்கையும் திரும்ப பெற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் வழக்கு தொடர்பான விசாரணையை அமெரிக்க அரசு முடுக்கி விட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் இந்த விடயத்தில், தேவயானி மீது தான் குற்றம் உள்ளது. அவர் வீட்டில் பணிபுரிய அழைக்கப்பட்ட ரிச்சாட் எனும் பெண்மணி மீது ஒரு குற்றமும் இல்லை. அவர் குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உயர்தர அதிகாரிகளின் வீடுகளில் பெரும்பாலான பணிப்பெண்களுக்கு நடைபெறுவது இது தான். இப்போது ரிச்சார்ட் மீது விசா மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தி தேவயானி தான் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார். இந்திய தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றதை தொடர்ந்து, தலைநகரிலேயே தோல்வி அடைந்துவிட்டோமே எனும் விரக்தியில் காங்கிரஸ் அரசு அவ்விடயத்தை திசை திருப்பி, தேவயானி விவகாரத்தை பூதாகரமாக பற்றவைக்கிறது. நியாயப்படி தேவயானியை, அவரது உடை நடை, பாவணை, அல்லது அவரது அதிகாரம் என்பவை எதனையும் கருத்தில் கொள்ளாது, அனைவருக்கும் சமமான சோதனை எப்படி மேற்கொள்ளப்படுமோ அது போன்றே அவரையும் சோதனை நடத்திய மார்ஷல் காவல்துறையினரை நாம் பாராட்ட வேண்டும் என சில முக்கிய அமெரிக்க ஊடகங்கள் பொறிந்து தள்ளியுள்ளன.

0 Responses to தேவயானி கைது விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது : அமெரிக்கா திட்டவட்டம்