Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்து ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மன்னார் கத்தோலிக்க ஆயர் இல்லத்தில் இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றுள்ள சந்திப்பில் மன்னார் மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள், அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்ற கிராமங்களில் காணப்படும் மக்களின் பிரச்சினைகள்  குறித்து மன்னார் ஆயரும், மக்கள் பிரதிநிதிகளும் முதலமைச்சருக்கு விளக்கியுள்ளனர்.

இன்றை சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன், சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்களும், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

0 Responses to வடக்கு முதலமைச்சர் மன்னார் விஜயம்: ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com