Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானிக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மோதல்களுக்கு பின்னரான வடக்கு மாகாணத்தின் நிலவரங்களை நேரடியாக அவதானிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி நேற்று திங்கட்கிழமை இலங்கை வந்தார். இன்று காலை வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது ஆளுநர் இல்லத்தில் சந்தித்து பேசிய சலோகா பெயானி, அதன் பின்னர் வடக்கு முதலமைச்சரை  சந்தித்தார்.

அத்தோடு, யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து பேசவுள்ளார்.

நாளை புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் பிராந்திய இராணுவத்தளபதிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதன்பின்னர் கொழும்பு வரும் அவர், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களையும், முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

0 Responses to ஐ.நா.வின் விசேட பிரதிநிதி சலோகா பெயானிக்கும், வடக்கு முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com