ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் விதிமுறைகளை மீறி புதிய நலத் திட்டங்களை அறிவித்ததாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன் குமாருக்கு புகார் வந்ததாகவும்,
இதை அடுத்து இன்று மாலைக்குள் ஜெயலலிதா இந்த புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டு இருந்ததாகத் தெரிய வருகிறது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஜெயலலிதா தமது விளக்க கடிதத்தில், நடைமுறைப் படுத்தப் பட்ட நலத் திட்டங்கள் பற்றி மட்டும்தான் தாம் ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாகவும்,புதிதான நலத் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ள ஜெயலலிதா,
எனவே, தம் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

0 Responses to தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை! - ஜெயலலிதா விளக்கம்!