இலங்கை அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறும் வகையில், வடக்கு மாகாண அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடுகளை மத்திய அரசாங்கம் செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
குறிப்பாக, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அரசியலமைப்பை மீறும் விதத்தில் செயற்படுவதால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான சட்ட ரீதியிலான தீர்மானமொன்றை நிறைவேற்ற மாகாண சபையால் முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் வடக்கு மாகாண சபையில் அண்மையில் ஆற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகிய இரண்டு துறைகளை (திணைக்களங்களை) புதிதாக உருவாக்கப்போவதாக அறிவித்திருந்ததன் மூலம், முதலமைச்சர் அரசியலமைப்பை மீறியிருப்பதாக ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி குற்றஞ்சாட்டியிருப்பதை பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது, மாகாண அரசாங்கமொன்றின் நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் விதமாக ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி குற்றஞ்சாட்டியிடுப்பது அரசியலமைப்பை மீறும் செயல். மத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறு அரசியலமைப்பை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணமொன்றில் முதலைமைச்சருடன் கலந்துரையாடிய பின்னரே மாகாண சபையில் பிரதம செயலாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், வடக்கு மாகாண செயலாளர் நியமனத்தில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. தமக்குப் பொருத்தமான ஒருவரை பிரதம செயலாளராக முதலமைச்சர் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையிலும், பல வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த நியமனம் சாத்தியப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வடக்கு மாகாணத்துக்கு புதிதாக பிரதி பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அதுபற்றி கூட வடக்கு மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடப்படவில்லை. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் பிரகாரமும், மாகாண சபை சட்டத்தின் பிரகாரமும் மாகாண சபை நிர்வாகத்தின் அதிகாரப் பட்டியலின் கீழுள்ள பல விடயங்களை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசாங்கம் தடையாக செயற்படுகின்றது என்று எம்.ஏ.சுமந்திரன் பி.பி.சி.க்கு வழங்கிய செவ்வியொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல்களின் பின்னர் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று அதன் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மத்திய அரசாங்கத்திற்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாலும், அரச தரப்பிலிருந்து அவ்வாறான சாதகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட வில்லை என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண அரசாங்க நிர்வாகத்தில் மத்திய அரசாங்கம் தலையிடுகிறது: த.தே.கூ குற்றச்சாட்டு