Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்களை நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தினால் முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மோதல்கள் முடிவுற்ற நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த 300 பரிந்துரைகளில் முக்கியமானவற்றை செயற்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 4 வருடங்கள் மட்டுமே ஆனா நிலையில் நாட்டில் அபிவிருத்தியின் அடையாளங்களை காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாகவும், மோதல்களினால் பாதிப்புள்ளாகியிருந்த வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி 22 வீதமாகவும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பிரென்ஷா லற்றினா (Prensa Latina ) செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடர் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவ்வளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆராய விளையலாம். சில நாடுகள் எம்மீது சர்வதேச விசாரணையொன்றுக்கு அழுத்தங்களை வழங்கலாம். ஆனால், எமது பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றம் எம்மிடம் இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to நாட்டு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆற்றல் இலங்கையிடம் இருக்கிறது: ஜீ.எல்.பீரிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com