Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைவாக 19வது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தையும் மக்களின் இறைமையையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் 19வது திருத்தச்சட்டமூலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையென்ற அரக்கன் 18வது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக மேலும் பலப்படுத்தப்பட்டமையானது துரதிஷ்ட வசமானது. இவ்வாறான நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to மக்கள் ஆணைக்கு அமைய 19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com