Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி  தென்சென்னை மாவட்ட திமுக சார்பில், சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் தந்தை பெரியார் நினைவுத்திடலில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டம் இரவு 8 மணிக்கு துவங்கியது.தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஜெ.அன்பழகன் இக்கூட்டத் திற்கு தலைமையேற்றார். திமுக தலைவர் கலைஞர் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக திமுக துணைப்பொ துச்செயலாளர் துரைமுருகன் சிறப்புரை ஆற்றினார்.

’’திராவிட முன்னேற்றக்கழகம் என்னுடைய உயிர்; என் மூச்சு; அந்த கழகத்தைப்பற்றி எவன் என்ன பேசினா லும் அதற்காக கவலைப்படாமல்,  அந்த கழகத்தினுடைய தலைமை பொறுப்பேற்றிருக்கின்ற என்னைப் பற்றி,  யார் எவ்வளவு தாக்கினாலும்,  என் மீது காரி உமிழ்ந்தாலும்கூட,  அதையும் துடைத்துக் கொண்டு,  திராவிட முன்னேற்றக்கழகத்தை காப்பாற்ற ரத்தம் சிந்துபவன்தான் இந்த கருணாநிதி என்பதை, நான் அவர்களுக்கு சொல்கின்றேன்; உங்களுக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.

அதிமுக பொதுக்குழுவில், தீயசக்தி கருணாநிதியை வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தோற்கடியுங்கள்; அன்புவேண்டுகோள் என்று பேசியிருக்கிறார்கள்.   இதுக்கு பெயர் அன்புவேண்டுகோளாம்.  (சொல்லிவிட்டு சிரிக்கிறார் )எனக்கு வாக்களிக்ககூடாது என்று அன்புவேண்டுகோள் விடுக்கிறார் அம்மையார்.  என்னை புறக்கணிக்கவேண்டும் என்று சொல்லவேண்டிய அளவிற்கு தைரியம் வந்திருக்கிறது. நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; எல்லா மக்களுமே என்னை புறக்கணித்தாலும்,  நாம் செய்த காரியங்களை, நாம் ஈடுபட்ட போராட்டங்களை, எல்லாம் நினைக்காமல் மக்கள் இன்று புறக்கனித்துவிட்டால்,

நான் இந்த உலகத்திலே உயிர் ஒட்டிக்கொண்டிருக்கிற வரையில், என்னுடைய உடல், கடைசி மூச்சை விடுகின்ற வரையில், திராவிட மக்களுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ் மொழிக்காக நான் பாடுபடுவேன், பணியாற்றுவேன் என்பதை மாத்திரம்,  இங்கே குழுமியிருக்கின்ற தா்ய்மர்களுக்கும், பெரியோர்களுக்கும், நண்பர்களூக்கும், என்னுடைய உடன்பிறப்புகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழுக்கு நான் செம்மொழி அந்தஸ்து வாங்கித்தந்ததை மறந்துவிட்டு, என்னை தமிழின துரோகி என்று சொல்கிறார் ஜெயலலிதா.  பிற்காலத்தில் ஜெயலலிதாவைப்போன்ற ஒருவர், தமிழ்நாட்டு சரித்திரத்தை எழுதுவாரேயானால்,  வேண்டாம் அந்த விபரீதம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம்.

ஒரு வேளை எழுதுவாரேயானல், அவர் என்ன எழுதவேண்டும்? தமிழ்நாட்டிலே, தமிழுக்கு, செம்மொழி என்ற அந்தஸ்தை, 100ஆண்டுகாலமாக பெரிய பெரிய அறிஞர்களெல்லாம் கேட்ட அந்த தகுதியை பெற்றுத்தந்தவன் கருணாநிதி என்ற கருத்தை அதில் எழுதும்போது,    இவர்கள் என்ன செய்வார்கள். ஜெயல லிதா அப்போ இருந்தால், நானும் இருந்தால், என்னைப்பாராட்டுவார்களா? பாராட்டமாட்டார்கள்.  

போற்றுகின்ற, புகழுகின்ற ஒரு காரியத்தை,  நான் செய்தேன் என்பதற்காக  பாராட்டுகின்ற குணம் ஜெயலலிதாவுக்கு கிடையாது.  அப்படி இல்லாத காரணத்தினால்தான், சென்னையிலே செம்மொழி பூங்கா, என்று நான் அமைத்ததை, இந்த அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன் மூடச்சொல்லிவிட்டார். அதைப் போலத்தான் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் பாழ்படுத்தியிருக்கிறார்.

ஒரு ஆட்சி போனால் அடுத்து வருகின்ற ஆட்சி அதை தொடர்ந்து செய்வதுதான் அந்த ஆட்சிக்கு அழகு.  என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர்.  அவர்கள் சத்துணவு திட்டத்தை நடத்தினார். நான் ஆட்சிக்கு வந்தவுடன்,  எம்.ஜி.ஆர். நமக்கு விரோதியாற்றே, எம்.ஜி.ஆர் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்துவதா என்று எண்ணவில்லை.

அதை மேலும் விரிவுபடுத்தவேண்டும் என்று சத்துணவு திட்டத்திலே முட்டையை கொண்டுவந்தேன்.  முன்பு இருந்த ஆட்சி என்ன செய்ததோ அந்த திட்டங்களையெல்லாம் மூழி ஆக்குவதுதான் முதல் வேலை என்று, அதை செய்துகொண்டிருக்கிறார் ஜெயலலிதா என்பதுதான் எனக்கு மிக மிக கவலை.

மக்களுக்கு செய்கின்ற நல்ல காரியங்களை அழித்துவிடச்சொன்னால் அவர்களைப்போன்று தீயசக்திகள் யாரும் இருக்க முடியாது.  அந்த தீயசக்திகள் பட்டியலிலே தன்னை இணைத்துக்கொண்டிருக்கின்ற  ஜெயலலிதா,  நம்மை தீயசக்தி என்று சொல்கிறார்.  இந்த தீய சக்திகள் வளரலமா? இந்த தீய சக்திகளுக்கு நாம் ஆதரவு தரலாமா? ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாமா? என்பதை எண்ணிப்பார்த்து உங்களூடைய ஆற்றலை அறிவை, விருப்பத்தை எதிர்காலத்தில் தமிழ்நாடு செழிக்க, உங்களுடைய தொடர்பணியை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று  பேசினார்.

0 Responses to தீய சக்தி ஜெயலலிதா நம்மைப்பார்த்து தீய சக்தி என்று சொல்கிறார் : கலைஞர் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com