நெல்லை பேட்டை புனிதஅந்தோணியார் ஆலயத்தின் பாதிரியராகவும்,அங்குள்ள பள்ளியின் செயலாளராகவும் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியை சார்ந்த ஞானப்பிரகாசசெல்வம் பணியாற்றி வந்தார்.
இவரிடம் இதே பகுதியை சார்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், இசை மற்றும் கிறிஸ்தவ பாடல் பயிற்சி பெற வந்து சென்றுள்ளார். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாதிரியார் தமது பங்களாவில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
அதில் மாணவி 5 மாத கர்ப்பிணியானார். சில தினங்களில் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்படுவதை கண்ட அவரது தாய் விசாரித்துள்ளார். பாதிரியார்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியிருக்கிறார்.
உடனே பெற்றோர்கள் பாதரியாரிடம் விஷயத்தை சொல்-, முறையிட்ட போது அவர்களை சரிகட்டிய பாதரியார் கருகலைப்பு செய்வதற்காக பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் 5 மாத கருவை கலைக்க செய்து, அந்த சிசுவை கல்லறையில் உள்ள தோட்டத்திலேயே புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர அவர்கள் பிரச்சனையை கிளப்பியபோது தகவல் பொலிசார் வரை சென்றது.
மாணவியின் பெற்றோரிடம் பொலிஸ் விசாரித்து அவர்களிடம் புகார் வாங்கி கொண்டனர். அதன் அடிப்படையில் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விமலா, பாதரியார் செல்வம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து பாதரியார் தலைமறைவானார். மேலும் அந்த சிசுவை தோண்டி எடுப்பதற்கு அதிகாரிகள் உதவியோடு வெள்ளிக்கிழமை காலை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசு மருத்துவர் செல்வமுருகன், தாசில்தார் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் சர்ச்சின் கல்லறை தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் தோண்டப்பட்டது.
ஒன்றரை அடி ஆழத்திற்கு கீழே ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் சில சதை துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அங்கேயே சோதனை செய்த மருத்துவர், டிஎன்ஏ சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதுதொடர்பாக பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பெண் ஆய்வாளர் விமலா ஆகியோர்தலைமறைவான பாதரியாதை தேடி வந்தனர்.
இதற்கிடையே பொலிசாரால் தேடப்பட்ட பாதிரியார் செல்வன், தேனி மாவட்டம் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தார்.
அவரை வருகிற 26ம் திகதி நெல்லை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கவும் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பாதிரியார் செல்வன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
0 Responses to 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: சிக்கினார் பாதிரியார்