அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவயானியை அவமானப்படுத்தி கைது செய்ததைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டடத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.சி, எஸ்.டி. அணியின் மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அமெரிக்காவை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க தவறிய இந்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சர்வோத்தமன் கூறியதாவது, தேவயானி மீது போடப்பட்டுள்ள வழக்குக்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஏஜெண்டுகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
தேவயானி மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறாவிடில் அமெரிக்க அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
படங்கள்: அசோக்

0 Responses to தேவயானி விவகாரம்: அமெரிக்காவை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்