கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில் சென்று பார்வையிட்டார்.குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பிரதேசம் மற்றும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களை கூட்டமைப்பு சார்பு வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரினில் அழைத்து சென்று காண்பித்தார்.நாளை முல்லைதீவிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சகிதமே அவர் வருகை தந்துள்ளார்.ஏற்கனவே சுற்றுலா விசாவினில் வந்திருந்த இந்தியப்பத்திரிகையாளர் தமிழ் மகா பிரபாகரன் வன்னியினில் கைதாகி நாடு கடத்தப்பட்டுள்ள நிலையினில் அதே சுற்றுலா விசாவினில் கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வருகை தந்துள்ளமை அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே ராதிகா சிற்சபேசனது வருகை தொடர்பாக செய்தி சேகரிக்க முடியாத அளவிற்கு இராணுவப்புலனாய்வு பிரிவின் ஈக்கள் போல மொய்த்து திரிவதாக தெரிவிக்கும் உள்ளுர் ஊடகவியலாளர்கள் அதே வேளை அவரையும் சிக்க வைக்க ஊடகங்களினில் புகைப்படங்களுடன் செய்திகளை அறிக்கையிட கோரிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ராதிகா சிற்சபேசன் யாழப்பாணத்தில்! கூடவே மொய்த்துப்போய் இலங்கை புலனாய்வு பிரிவினர்!!