அமெரிக்காவின் இந்தியாவின் துணைத் தூதுவ அதிகாரிகளில் ஒருவரான தேவயானி கோப்ரகாத், போலி விசா குற்றச்சாட்டில் அமெரிக்க காவல்தூறையினரால் கைது செய்யப்பட்ட விதம் இந்தியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, கொள்ளை என கடும் கிரிமினல் குற்றங்களைப் போன்று பொதுவிடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தேவயானி, ஆடைகள் களையப்பட்டு சோதனை நடத்தப்பட்டதாகவும், போதைப் பொருள் பாவணையாளர்களை அடைத்து வைக்கும் சாதாரண சிறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இதையடுத்து அமெரிக்க அரசு மீதும் நியூயோர்க் காவல்துறை மீதும் கடும் அதிருப்தியை கொட்டித் தீர்த்திருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை.
ஒரு தூதுவருக்கு உரிய கௌரவத்தை அளிக்க அமெரிக்கா தவறிவிட்டது. இதுவேண்டுமென்றே அவமானப்படுத்த மேற்கொண்ட செயலாக தெரிவதாக இந்தியா மேலும் குற்றம் சாட்டியுள்ளது.
அதோடு இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளும் தமது அடையாள அட்டைகளை திரும்பக் கையளிக்குமாறும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தூதரக சிறப்பு அந்தஸ்துக்கள் மீண்டும் திரும்பபெற்றுகொள்ள விருப்பதாகவும் மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இந்தியாவிலிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் எவரையும் சந்திப்பதற்கு காங்கிரஸ் தலைவர்களோ, பாஜக தலைவர்களோ மறுப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
உள்துறை அமைச்சர்கள், அமெரிக்க தூதர்களை சந்திக்க கூடாது எனும் முடிவு லோக்சபா பேச்சாளர் மீரா குமாரால் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை மாநில ஆர்.பி.என் சிங் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷீண்டே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோரும் அமெரிக்க தூதர்களை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.
1999ம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான தேவயானி (39), கடந்த வாரம் தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் நியூயோர்க் தெருவில் வைத்து காவல்துறையினரால் திடிரேன கைது செய்யப்பட்டு பொதுவிடத்தில் வைத்தே விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் 250,000 அமெரிக்க டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்ணுக்கு அமெரிக்கா விசா பெற போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக தேவயாணி மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

0 Responses to தேவயானி கைது செய்யப்பட்ட விதத்தால் சர்ச்சை : கடும் அதிருப்தியில் இந்தியா