நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் கருணாநிதி பேசும்போது இதனைத் தெரிவித்தார்.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறிய அவர், காங்கிரஸாரால்தான் திமுகவின் முன்னணியினர் பலர் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது என்று தெரிவித்தார். காங்கிரஸின் செயல்களை திமுக மறந்துவிடாது. நன்றி மறந்த காங்கிரஸை திமுக மன்னிக்காது என்றும் அவர் கூறினார். அப்படியாயின் பாஜகவுடன் கூட்டணி சேருமா என கேட்கப்பட்ட போது, 'வாஜ்பாய் காலத்து பாஜக வேறு, இப்போதுள்ள பாஜக வேறு' என்றார்.
"கூட்டணி அமைப்பது பற்றி பேசுவதற்காக பேச்சுவார்த்தைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். அந்தக்குழு, இதையெல்லாம் ஆராய்ந்து எங்களிடம் தெரிவிக்கும். பின்னர் நாங்கள் முடிவெடுப்போம். ஆனால் வாஜ்பாய் காலத்து பாஜக வேறு, தற்போதைய பாஜக வேறு" என்றார் அவர்.
முன்னதாக, தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழு அமைக்கவும், கூட்டணி அமைக்கவும் திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் ஆகியோருக்கு அதிகாரம் அளித்து தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த அக்கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராச்சாமி, துரைமுருகன், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கலந்துகொள்ளவில்லை. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று கருணாநிதி தமது நெஞ்சுக்கு நீதி நூலின் 6ம் பாகத்தை பேராசிரியர் அன்பழகன் மூலம் வெளியிட்டார் என்பதும், அதை கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்காது - கருணாநிதி அறிவிப்பு