வடக்கு மாகாண சபையின் செயற்பாட்டை முடக்கும் செயற்பாடுகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரிக்கப்படாத இலங்கைக்குள் இனமுரண்பாடுகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டுமாயின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில், வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டதன் நோக்கங்கள் தவறிவிடும் வாய்ப்புக்கள் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு முந்திய குழுநிலை விவாதத்தில் நேற்று சனிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயர்தோர் நலன்சார் விசேட பிரதிநிதி சலோகா பெயானி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் சமர்பித்துள்ள இலங்கை குறித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் என்ன பதில்களை முன்வைக்கிறது என்று அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபையின் செயற்பாட்டை முடக்க அரசு முயல்கிறது - சம்பந்தன் குற்றச்சாட்டு