சர்வதேச நியமங்களுக்கு அமையவே மோதல் காலங்களில் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் நடைபெற்றதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மோதல் இழப்பீடுகள் பற்றி அரசாங்கத்தின் மதிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருத்து அரசியல் நோக்கங்கள் கொண்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பீட்டுப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கேள்விகள் அடங்கிய பத்திரத்தில் இழப்புக்கான காரணங்களுடன், இழப்பு தொடர்பான வேறு காரணங்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. உயிர் இழப்பு பற்றிய பகுதியில் “இது சீருடை தரித்தவர்களால் உண்டானதா“ எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதுதொடர்பில் குடும்பத்தவர்கள், உறவினர்கள் வசமிருந்த சான்றுகளையும் பரிசீத்துள்ளதாக ஏ.குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இழப்புக்கள் பற்றிய மதிப்பீட்டை நாடு முழுவதிலும் நடத்தியுள்ளோம். அதில், குறைபாடுகள் இருப்பதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. ஒரு மாதமாக நடந்த இந்த மதிப்பீட்டில் 15,500 அரசாங்க ஊழியர்கள் பங்கேற்றனர். வடக்கில் ஒரு தகவல் சேகரிப்பவருக்கு 500 குடும்பங்களையும், தெற்கில் 1000 குடும்பங்களையும் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. இந்த மதிப்பீட்டின் முதலாவது அறிக்கை வரும் பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 Responses to சர்வதேச நியமங்களுக்கு அமையவே மோதல் இழப்பு மதிப்பீடுகள் நடைபெற்றன: புள்ளிவிபரத் திணைக்களம்