அண்மையில் மறைந்த கறுப்பின விடுதலைத் தலைவரும் தென்னாபிரிக்கத் தேசத் தந்தையுமான நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் தேசியக் கொடியை திங்கள் சூரிய அஸ்தமனம் வரை அரைக் கம்பத்தில் பறக்க விடும் படி அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு முக்கிய காரணமாக நெல்சன் மண்டேலா உலக மக்கள் அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாகவும் ஒபாமாவை அதிகம் கவர்ந்த தேசத் தலைவராகவும் விளங்கியமை ஆகும்.
இந்த உத்தரவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உட்பட அனைத்து மாநிலங்களினதும் அரச ஸ்தாபனங்கள் கடைப்பிடித்த போதும் தெற்குக் கரோலினா மாநிலத்தின் ஆளுனரான ரிக் கிளார்க் இந்த உத்தரவை மறுத்ததுடன் தனது ஆளுகைக்கு உட்பட பகுதிகளில் அமெரிக்கத் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப் படாது என்றும் கூறியுள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில், 'இந்த அரச மரியாதை அமெரிக்காவுக்காகத் தமது இன்னுயிரை அர்ப்பணித்த குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப் பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்காவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் கொடி நமது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுவதற்கு அர்த்தம் உள்ளது. ஆனால் எமது தாயகத்தில் அல்ல!' என்றும் கூறியுள்ளார்.
வெளிநாட்டு உலகத் தலைவர்கள் அல்லது முக்கியஸ்தர்கள் மரணம் எய்திய போது அமெரிக்காவில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது இதுவே முதன்முறையல்ல. ஏற்கனவே போப் ஜோன் போல் 2 மரணித்த போது அதிபர் புஷ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ராபின் கொல்லப் பட்ட போது கிளிங்டனும் இந்த உத்தரவினைப் பிறப்பித்திருந்தனர். எனினும் இந்த உத்தரவுகள் யாவும் அமெரிக்க அதிபர்களின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அமையவே பிறப்பிக்கப் பட்டிருந்தன. உதாரணமாக முன்னால் பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சர் மரணமடைந்த போது ஒபாமா இந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவின் தென் கரோலினாவில் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட ஆளுனர் மறுப்பு