Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிப் போரில்  இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பதனை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

லண்டனிலிருந்து வெளிவரும் “ஏசியன் லைட்“ என்ற ஊடகத்துக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் சமத்துவமான நிலையில் வாழச் செய்யப்பட வேண்டும்.

இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கு இது ஒரு பிரதான தேவையாகும்.

இலங்கை  ஓர் அழகான நாடு. அது மேலும் முன்னேற்றமடைய வேண்டும். யுத்தம் காரணமாக அந்த நாடு இன்று அழிவடைந்துள்ளது.

எது எப்படியிருப்பினும் இறுதிக் கட்ட யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணை ஒன்று தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் போர்க்குற்ற விசாரணை: மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கமரூன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com