வலி.வடக்கிலுள்ள எமது சொந்த இடங்களினில் குடியமர நடவடிக்கை எடுங்கள்.இதை தவிர மாற்று தீர்வுகளோ நிவாரணங்களோ எமக்கு தேவையில்லையெனவுறுதியாக தெரிவித்துள்ளனர் இடம்பெயர்ந்த வலிவடக்கு மக்கள்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜ.நாவினது இடம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானி இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் இவர் இலங்கை வந்திருந்தார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாகவே இன்று அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். வட மாகாண ஆளுநருடனான சந்திப்பு அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அதன் பின் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களை ஐநாவின் பிரதிநிதி சந்தித்தார். இதன் போது யாழ் மாவட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திகள் தொடர்பாக அரசாங்க அதிபருடனும் வடக்கு முதல்வருடனும் கலந்துரையாடியிருந்தார்.
அதனை தொடர்ந்து வலி.வடக்கு பாதுகாப்பு வலயத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியினை சந்தித்து பேச்சுக்களை நடத்தியதுடன் அங்கு மதிய விருந்திலும் கலந்து கொண்டார்.அத்துடன் படைத்தரப்பினால் அமைக்கப்பட்டுவரும் புதிய பாதுகாப்பு அணை மற்றும் வேலியை பார்வையிட்டதுடன் படைதரப்பினால் மக்களை மீள்குடியமர்த்தவென அறிவிக்கப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலை கல்குவாரியினையும் பார்iவியிட்டிருந்தார்.
இதன் பின்னர் வலி.வடக்கு மக்கள் இடமபெயர்ந்த நிலையினில் வாழ்ந்து வரும் முகாம்களுள் ஒன்றான மல்லாகம் கோணப்புலம் முகாமினையும் அவர் பார்iவியிட்டிருந்தார்.அங்கு மக்களை பொது இடமொன்றினில் சந்திக்க வைக்க அதிகாரிகள் முற்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கள் தமது கொட்டில்களை பார்வையிட்டால் மட்டுமே பேசமுடியுமென தெரிவித்திருந்தனர்.அதையடுத்து நேரடியாக மக்களது கொட்டில் வீடுகளை பார்வையி;ட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசியிருந்தார்.
அப்போது மக்களிடம் மாற்று இடங்களை வழங்கினால் குடியேற விருப்பமா என எழுப்பப்பட்ட கேள்வியினை முற்றாக மறுதலித்த இடம்பெயர்ந்த மக்கள் தமக்கு வேறு எந்த நிவாரணமும் தேவையில்லையென தெரிவித்ததுடன் 24 வருடங்கள் கடந்த பின்னரேனும் தமது சொந்த இடங்களை சென்றடைய வலியுறுத்தினர்.
தான் ஜநாவினது பணியாளர் அல்லவென மக்களிடையே தெரிவித்த அவர் இடம்பெயாந்த மக்கள் தொடர்பினில் பல நாடுகளிற்கும் விஜயம் செய்திருந்த பாண்டித்தியத்தின் அடிப்படையினில் மட்டுமே தற்போது தாம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவாதமது பயணம்தொடர்பாக ஒரு அறிக்கையையும் அவர் வெளியிடவுள்ளாதாக தெரிவித்தார்.
இதனிடையே இன்றிரவு சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேச்சுக்களை நடத்;தியிருந்தார்.அச்சந்திப்பினிலும் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சொந்த இடங்களிலான மீள்குடியமர்வினையே வலியுறுத்தியிருந்தனர்.

0 Responses to சொந்த இடமே வேண்டும்! நிவாரணமோ மாற்றிடமோ தேவையில்லை –வலி.வடக்கு மக்கள்!!