Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இருந்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் கட்சி என்பதை தேமுதிக நிரூபித்துள்ளது. டெல்லி வாழ்தமிழர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் உத்திரவாதம் ஏற்படுத்திடவும் தேமுதிக இத்தேர்தலில் களம் இறங்கியது.

இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது பணபலம், ஆட்சி அதிகார பலம் மூலம் எத்தனையோ அச்சுறுத்தல்களை தந்தாலும் எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் தேமுதிக தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

இத்தனை ஆண்டுகளும் பெரும் செல்வந்தர்கள் வேட்பாளர்களாக வலம் வரும்போது தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதும் தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கும் சென்று ஓட்டுப்போடுவதையும் தவிர எதையும் அறியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த நம் தமிழர்களுக்கு அவர்களும் தேர்தலில் போட்டி போடலாம். மற்றவர்களுக்கு இணையாக தாங்களம் வேட்பாளர்களாக ஆக முடியும் என்பதை தேமுதிக நிரூபித்ததோடு டெல்லி வாழ் ஏழை தமிழர்களிடையே நம்பிக்கையும், உறுதியையும் அசைக்க முடியாத தைரியத்தையும் தேமுதிக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

கேப்டனோடு இணைந்து தேர்தல் பணிக்கு வந்திருந்து அத்தனை பணிகளையும் எந்த சிரமமும் பாராமல் உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் டெல்லி வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து சமவாய்ப்பை ஏற்படுத்தி தந்ததன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தைரியும், நம்பிக்கை நம்மாலும் முடியும் என்ற உறுதியை தேமுதிக விதையாக விதைத்து இருக்கிறது.

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதற்கு இணங்க இந்த நம்பிக்கையே நாளை வெற்றியாக மாறி நல்ல எதிர்காலத்தை நம் மக்களுக்கு உருவாக்க முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை கருத்தில் கொண்டு தேமுதிக என்று தன் ஜனநாயக கடமையை ஆற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 Responses to வாக்களித்த டெல்லி தமிழர்களுக்கு நன்றி: தேமுதிக தலைமைக் கழகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com