மோதல்களுக்கு பின்னரான இலங்கையின் நிலைமையை நேரில் கண்காணிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அதிகாரமுள்ள விசேட தூதுவர்களை இலங்கை அழைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இன்னமும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் இருக்கும் விடயங்கள் மற்றும் வேண்டுகோள்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் கூட்டமைப்பு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
மோதல்களுக்கு பின்னரான இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்தோருக்கான ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவர் ஆகியோரின் விஜயம் இடம்பெற்றிருப்பதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியமை உள்ளிட்டவற்றை வரவேற்றுள்ளது.
ஆனாலும், இலங்கையில் இன்னமும் கருத்து சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறைக்கான சுயாதீனமும் வினைத்திறனும் மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட விடயங்களில் சவால்கள் காணப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to ஐ.நா.வின் விசேட தூதுவர்களை இலங்கை அழைக்க வேண்டும் : ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்