ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் ஏதும் நிர்ப்பந்திக்க வேண்டிய தேவைகள் இருக்காது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மேற்குலகுடன் ஈரான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் சர்ச்சைக்குரிய அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகள் நிறுத்தப் படும் தீர்மானம் எட்டப் பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நிகழ்த்தப் பட்ட ஊடகப் பேட்டி ஒன்றின் போதே அவர் இக்கருத்துக்களைக் கூறியுள்ளார். ஒபாமா இது குறித்து மேலும் கூறுகையில் மேற்குலகு தமக்கு எதிராக ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கின்றது என சந்தேகப் படும் படியான நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ள போதும் இதை மீறி செயற்பட்டால் மறுபடியும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்ற சந்தர்ப்பம் அளித்துள்ள கால இடைவெளிக்குள் அதன் மீது புதிய தடைகளை விதிக்கும் படியான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டாமென அமெரிக்க காங்கிரஸ்ஸில் அவர் விண்ணப்பித்துள்ளார். சமீபத்தில் ஜெனிவாவில் G5+1 நாடுகளுடன் ஈரான் பத்து வருடங்களுக்குப் பின்னர் அணுசக்தி ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்துவது தொடர்பில் முக்கிய ஒப்பந்ததை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் தேவையில்லை:பாரக் ஒபாமா