Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய்லாந்தில் அடுத்த வருடம் பெப்ரவரி 2 ஆம் திகதி நடைபபெறவுள்ள தேர்தலைத் தமது கட்சி புறக்கணிப்பதாக தாய்லாந்தின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் இந்நடவடிக்கை மூலம் தாய்லாந்தில் ஆளும் அரசுக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் புரட்சியினை வலுப்படவும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்றுப் போவதற்கும் வழி ஏற்படவுள்ளது.

தாய்லாந்தில் சமீப காலமாக ஆளும் அரசை அகற்றி விட்டு தேர்தலைத் தடை செய்யும் முகமாகவும் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமது புறக்கணிப்புக் குறித்து தாய்லாந்தின் முன்னால் பிரதமரும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான அபிசிட் வெஜ்ஜாஜீவா கருத்துத் தெரிவிக்கையில், தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசியல் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது என்றும் ஜனநாயக முறையில் தாய்லாந்து மக்கள் தமது நம்பிக்கையினை இழந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பாரியளவில் மக்கள் புரட்சி வெடித்த போதும் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் யின்லுக் சினாவாத்ரா பதவி விலக மறுந்து டிசம்பர் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். மேலும் மக்கள் விருப்பப் படி ஆட்சி அமைய தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆயினும் மக்களின் எதிர்ப்பு சற்றும் குறைவடையாததுடன் தலைநகர் பாங்கொக்கில் நாளை ஞாயிற்றுக் கிழமை மிகப் பெரிய பேரணி ஒன்றை நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தாய்லாந்தில் ஆட்சியில் உள்ள சினாவாத்ராவின் புயே தாய் கட்சி நடக்கவுள்ள தேர்தலில் பெரும்பாலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நடந்தால் அரசுக்கு எதிரான மக்கள் வன்முறையில் ஈடுபட்டு அதனை எதிர்க்கக் கூடிய சூழ்நிலை நிலவுகின்ற போதும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் திட்டமிட்ட படி தேர்தல் நடைபெறும் என வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தாய்லாந்து எதிர்க்கட்சி தேர்தலைப் புறக்கணிப்பு: எதிர்க்கட்சித் தலைவர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com