Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவுக்கான இந்திய துணைத்தூதுவர் தேவயானி கோப்ராகாட்டை நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர திட்டத்திற்காக மாற்றம் செய்துள்ளது இந்தியா.

 இதன் மூலம் அவருடைய தூதரக அதிகாரிகளுக்கான விசேட சலுகையை மேலும் உயர்த்தியுள்ளது. இது, அவரை சாதாரண தூதரக அதிகாரி  எனும் நிலைப்பாட்டிலிருந்து இல்லாமல் செய்தலாகும்.

ஐ.நா தர அங்கீகாரத்திற்கான தற்போது தேவயானி விண்ணப்பித்துள்ளார். அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கள அனுமதிக்கு பிறகு இந்த ஆங்கீகாரம் அவருக்கு கிடைக்கும்.  இதன் பின்னர் வெளிநாட்டு தூதகர்களுக்கான முழுமையான விதிவிலக்கு சலுகைகளை அவர் பெற முடியும்.

இந்நிலையில் வெளிவிவகார் ஆமைச்சர் சல்மான் குர்ஷித் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், அமெரிக்கா - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையில் இதுவரை நல்ல உறவே இருந்து வருகிறது.  அமெரிக்கா திடீரென மேற்கோள்ளும் இவ்வாறான ஒரு பிறழ்ச்சியை நாம் விரும்பவில்லை என்றார்.

மேலும் தேவயானி தொடர்பில் அமெரிக்கா அமைதியான முறையில் கையாண்டிருக்க வேண்டும். திட்டமிட்டு பொதுவிடத்தில் கைது செய்து, ஆடைகளை களைந்து சோதனையிட்டு, பொதுவாக கிரிமினல்களை அடைக்கும் சிறையில் அடைப்பது என்பது நிச்சயம் இரு நாட்டு தூதரக விடயங்கள் வரை பாதிக்க கூடியது என்றார்.

இதேவேளை இந்திய அதிகாரிகளின் தகவல்கள் படி, தேவையானி மீது சுமத்தப்பட்ட விசா மோசடி குற்றம் அவரால் மேற்கொள்ளப்படவில்லை. அவருடைய பணிப்பெண் சங்கீதாவின் கணவர் ரிச்சாட்டால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிச்சார்ட் மற்றும் அவரது இரு பிள்ளைகள் கடந்த டிசம்பர் 10ம் திகதி நியூயோர்க்கிற்கு பயணமானார்கள். அப்போது அவர்கள் அமெரிக்காவிடமிருந்து விசா வழங்கப்பட்டிருந்தனர். எனினும் இவ்வாறு விசா வழங்கும் முன்னரே ரிச்சார்ட் கணவர் மீது நீதிமன்ற பிடி ஆணை இருப்பது தொடர்பில் இந்தியா அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to தேவயானி கோப்ரகாட்டை ஐ.நாவுக்கு மாற்றியது இந்தியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com