Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி யுத்தத்தின் சாட்சியங்களை வேகமாக அழித்து விடுவதில் அரசம் அதனது அதிகார மட்டமும் முனைப்பு காட்டிவருகின்றன.அவ்வகையினில் பொதுமக்களால் கைவிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த வாகனங்கள் பழைய இரும்புக்காக விற்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் பராமரிக்கப்பட்ட வாகனங்களில் ஒரு பகுதி மட்டுமே பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும்பாலானவற்றை அடையாளம் காட்டியுரிமை கோர முடியாத நிலையினில் மக்களுள்ளனர். இவற்றை மாவட்ட செயலகம் பராமரித்து வந்தது. எனினும் அவை பாவனைக்குட்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து காணப்படுவதாகவும் டெங்கு நுளம்பு பெருகும் சூழலை கொண்டு காணப்படுவதாலும் கூறி  ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

மேற்படி வாகனங்கள் உரிய அமைச்சரவையின் அங்கீகாரத்தினைப் பெற்று சட்டமா அதிபரின் அனுமதியுடன் ரூபா 10 மில்லியன் ரூபாவிற்கு விற்கப்பட்டுள்ளதுடன், இந்த நிதியினை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார தேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும்; தெரிவிக்கபட்டுள்ளது.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் பகுதியினில் இருந்த அனைத்து கைவிடப்பட்ட வாகனங்களும் ஜ.நா பிரதிநிதிகளது வருகையினையடுத்து அவசர அவசரமாக அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 Response to யுத்த சாட்சியங்களை அழித்து விடுவதில் அரசு மும்முரம்!

  1. RP, do whatever you want to do now. You will have bad time, perhaps worst time after March 2014.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com