இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான படங்களுடன் யாரும் எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது. அவ்வாறு விண்ணப்பித்தாலும், அவை நிராகரிக்கப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
2014ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரணியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள் மதம் மற்றும் இனத்தை அடையாளப்படுத்தும் படங்களை எடுக்க கூடாது. சரியான வண்ணப்படத்துடனேயே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முஸ்லிம்கள், கிறிஸ்தவ அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆகியோர் தமது மதத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பி மற்றும் பர்தா அணிந்து புகைப்படம் எடுக்க முடியாது என்று தெரிகிறது. இதில், பௌத்த மத பிக்குகளின் அடையாள அட்டைகள் எவ்வாறு வழங்கப்படும் என்று சரியாக தெரிவிக்கப்படவில்லை.

0 Responses to இன, மத அடையாளங்களை பிரதிபலிக்கும் படங்களுடன் அடையாள அட்டைகளை இனிப் பெற முடியாது