Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டன் ஹரோ Woodgrange Close பகுதியில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு குழந்தைகளின் இரட்டைக் கொலை குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று  புதன்கிழமை  வெளியாகியுள்ளது.


இந்த மரணங்கள் மூச்சுத் திணறலால் ஏற்பட்டது என்பதும், அவர்களின் தாயினால் கொலை செய்யப்பட்டு உள்ளமையும் பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

இதனை லண்டன் ஈவினிங் ஸ்ரான்ட்டட் பத்திரிகை நேற்றைய  மாலை 18.17 மணியளவில் வெளியிட்ட தகவலில் உறுதிப்படுத்தியுள்ளது.

திரு. திருமதி. வாகேஸ்வரன் ஜெயவாணி தம்பதிகளின் பிள்ளைகளான, 5 வயதான அனோபனும், 7 மாதங்களான நதீபனும் பேர்ன்ற் டீசநவெ வீட்டில் கொல்லப்பட்ட நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டனர்.

இவர்களது சடலங்களுக்கு அருகில் இருந்த 33 வயதுடைய தாய் ஜெயவாணியின் சடலமும் மீட்கப்பட்டது.

ஜெயவானியின் மரணமும் கழுத்து நெரிவின் காரணமாக ஏற்பட்டது எனவும், வேறு எவரும் கொலை செய்ததாக தம்மால் சந்தேகிக்கப்படவில்லை எனவும் ஸ்கொட்லன்ட் யாரட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவரது பிள்ளைகளின் மரணங்கள் கொலை என்ற கோணத்திலேயே பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த வகையில் மூவரது மரணங்கள் குறித்து முறைப்படி. பிரேத பரிசோதனைகள் மூலம் இன்று அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

பிள்ளைகளின் தந்தையும் ஜெயவாணியின் கணவருமான வாகேஸ்வரன் Woodgrange Close இல்லத்திலேயே தனது கணக்கியல் நிறுவனத்தை பதிவு செய்து நடத்தி வந்துள்ளார்.

அவர் வெளியில் சென்று வீடு திரும்பிய போது மாலை 5.20 அளவில் மனைவியும் குழந்தைகளும் மரணித்து சடலங்களாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததனை அடுத்து அவர்களின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொலைகளிற்கான காரணம் மிகத் தெளிவாக புலப்படுவதாக ஸ்கொட்லன்ட்யாட் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

இருந்த போதும் மூவரினதும் மரணத்திற்கு முந்திய இரவில் அவர்களின் வீட்டில் சச்சரவுகள் நிலவியதனையும், வாய்த்தர்க்கங்கள் புரிந்ததனையும் அவதானிக்க முடிந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அயலவர்களின் கருத்துக்கள், பிரேத பரிசோதனைகள், கணவர் வாகேஸ்வரனின் வாக்குமூலம், அந்த வீட்டில் இவர்களுடன் 2 வருடங்களாக வாழ்ந்த நண்பரின் வாக்குமூலங்கள், உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து ஸ்கொட்லன்ட்யாட் பொலிசார் விசாரணைகளை நிறைவு செய்துள்ளனர்.

எனினும் 3 பேரின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இந்த வாரம் பாணற் நீதிமன்றில் (Barnet Coroners' Court) இடம்பெறவுள்ளது.

இதன் பின்பே 3 மரணங்கள் குறித்த முழுமையான காரணங்கள் நீதிமன்றின் தீர்ப்பாக வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to லண்டனில் தாய் மற்றும் 2 குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகின!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com