Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக-தேமுதிக கூட்டணி சேருமா?

பதிந்தவர்: ஈழப்பிரியா 16 January 2014

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுக இணைய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி நம்பிக்கை அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் சேர மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ரிபாகி, பொதுச்செயலாளர் ஜவஹருல்லா மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த ஜவஹருல்லா தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வரக்கூடாது. மதவாத சக்திகளை முறியடிப்பதற்காக விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேர வேண்டும். இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

எனினும் இதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதன் போது, 'திமுக-தேமுதிக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடந்திருக்கிறதா, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கிறதா' என எழுப்பிய கேள்விக்கு, 'பேச்சுவார்த்தையே நடைபெறவில்லை. அதனால் முன்னேற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை' எனப் பதில் அளித்தார் கருனாநிதி.

முன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த செவ்வியில், 'திமுக கூட்டணியில் வந்து சேருமாறு தேமுதிகவுக்கு கருணாநிதி வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.  தே.மு.தி.க. எங்கள் பக்கம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை' என்றார்.

'முன்னதாக திமுகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விஜயகாந்த்தை சந்தித்து பேசியது, ஒரு திருமணத்திற்கு அழைக்கவே. நாங்கள் அவரை விஜயகாந்த்துடன் சந்திக்க சொல்லவில்லை' எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

0 Responses to திமுக-தேமுதிக கூட்டணி சேருமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com