Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று ஞாயிற்றுக் கிழமை வடக்கு பாகிஸ்தான் நகரான பன்னு இல் அமைந்துள்ள இராணுவச் சோதனைச் சாவடி அருகே தீவிரவாதிகள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 20 படையினர் உட்பட 22 பொதுமக்கள் கொல்லப் பட்டதுடன் மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தகவலை பாகிஸ்தான் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இக்குண்டுத் தாக்குதல் பன்னுவில் இருந்து மிரான்ஷாஹ் நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத் தொடர் அணி வாகனங்களைக் குறி வைத்து நிகழ்த்தப் பட்டதாகவும் இதில் இராணுவ மற்றும் பொது மக்களின் வாகனங்களும் கூட இலக்கானதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் தமது படைத் தளபதி ஒருவர் கொல்லப் பட்டதற்குப் பலி வாங்கும் முகமாகவே இக்குண்டுத் தாக்குதலைத் தாம் நிகழ்த்தியதாகத் பாகிஸ்தானில் இயங்கும் தெஹ்ரிக் ஏ தலிபான் எனும் அமைப்பான TTP தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தெற்கு வஷிரிஸ்டானில் நிலை கொண்டுள்ள TTP அமைப்பின் முக்கிய படைத் தளபதி மௌலானா வாலியூர் ரெஹ்மான் என்பவர் 2013 மே 29 ஆம் திகதி அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியாகிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த இழப்புக்குப் பழி வாங்குவதற்கு 2013 ஜூனில் TTP அமைப்பினால் பாகிஸ்தான் மலைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 சுற்றுலாப் பயணிகள் உட்பட 11 பேர் கொல்லப் பட்டிருந்தனர்.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் இன்று இடம்பெற்ற கொடூரமான குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் இராணுவத்தினர் தனியார் வாகனங்களை இராணுவப் பேரணிக்குப் பயன்படுத்துவதற்கு விளக்கமும் கேட்டுள்ளார்.

0 Responses to பாகிஸ்தான் இராணுவ சோதனைச் சாவடி அருகே தலிபான்கள் குண்டுத் தாக்குதல்:22 படையினர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com