Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் ஜனநாயகமோ, மனித உரிமைகளோ கிடையாது என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னால் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றது. அதேபோன்று, ஜனநாயகம் இல்லையென்றும் கூறுகின்றது. அவை அனைத்தும் உண்மையே. நாட்டிலுள்ள அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வேலைகளை மாத்திரமே செய்கின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயகப் போராட்டங்களைத் துப்பாக்கி முனையில் அடக்கும் அரசாங்கம், என்னுடைய அரசியல் பயணத்தையும் அடக்க நினைக்கிறது. அதனை முறியடித்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என்று கம்பஹாவின் கட்டுநாயக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

0 Responses to நாட்டில் ஜனநாயகமும், மனித உரிமைகளும் இல்லை:சரத் பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com