Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்து, நாளை சசிதரூரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

நேற்று முன்தினம் சசிதரூரின் மனைவி சுனந்தா டெல்லியில் 5 நட்சத்திர விடுதியில் பிணமாகக் கிடந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று போலீசார் விசாரணையைத் துவங்கியுள்ள நிலையில், சுனந்தாவின் சாவுக்கு கணவர் சசி தரூர் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளருடன் தொடர்பில் இருந்ததே என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்த போது, மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி முன்னிலையில் சசி தரூர் மற்றும் சுனந்தாவுக்கு இடையே பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் குறித்து கார சார விவாதம் நடை பெற்றதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்த சுனந்தா, உடல்வலிக்கு அதிக வலி நிவாரண மற்றும் மன உளைச்சல் காரணமாக சில மாத்திரைகள் என்று, அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எதுவாயினும் சசிதரூரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ள போலீசார் நாளை இவரிடம் விசாரணையைத் துவக்க உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to சுனந்தா மரணம் குறித்து அவரது கணவர் சசி தரூரிடம் நாளை விசாரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com