Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீண் கலகங்களை ஆதரிக்கும் அரசு எங்களுக்குத் தேவையில்லை என்பதால் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மம்தா பானர்ஜி, மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மை தொகுதிகளை வெல்வோம் என்றும், மத்தியில் மாற்று சக்தி அரசமைக்க திரிணமுல் காங்கிரஸ் பெரும் சக்தியாக விளங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிராகவும், மத சார்புடமைக்கு எதிராகவும் போராடி வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றுமை, ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் என 3  தாரக மந்திரங்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார். வீண் கலகங்களை ஆதரிக்கும்  அரசுக்கு தங்களது ஆதரவு கிடைக்காது என்றும், வரும்காலத்தில் இந்தியாவின் மேம்பாட்டு வழியை திரிணமுல் காங்கிரஸ்தான் கைகாட்டும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

0 Responses to கலகத்தை ஆதரிக்கும் அரசு தேவையில்லை!:மம்தா பானர்ஜி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com