Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு புதிய தவிசாளர்களை நியமிக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, தற்போது பதவியிலுள்ள தவிசாளர்ளையும் நீக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட 8 பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எனினும், மாத்தறை, கெஸ்பேவ மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச சபைகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தவிசாளர்கள் எதிர்வரும் மார்ச்  31 ஆம் திகதி வரை குறித்த பிரதேச சபைகளின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதனிடையே, குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை மீண்டும் எதிர்வரும் மார்ச்  31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நாடு பூராவுமுள்ள 30க்கும் அதிகமான பிரதேச சபைகளில் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு, தவிசாளர்கள் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது.

0 Responses to வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு புதிய தவிசாளர்களை நியமிக்கத் தடை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com