புத்தாண்டு தினத்தையொட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழும்பூரில் உள்ள ஓட்டலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கை தமிழர் பிரச்சினையில் இனப்படுகொலை நடந்ததாக மக்கள் தீர்ப்பாயமே தீர்ப்பு சொல்லி உள்ளது. எனவே அங்கு நடந்த இனப்படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
அதனால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம். இதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
முதலில் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து பேசினோம். இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்று அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து 1 மணி நேரம் பேசினேன். இந்த சந்திப்பின்போது மாநில தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
கடந்த 2011 தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட வில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம்.
மீனவர் பிரச்சினை, தனி ஈழம் பிரச்சினை, மதுவிலக்கு பிரச்சினைக்காக தொடர்ந்து ம.தி.மு.க. குரல் கொடுத்து வருகிறது.
இதற்காக நடைபயணம் மேற்கொண்டேன். நான் மக்களை சந்தித்தபோது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தினர். ம.தி.மு.க. பக்கம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு உள்ளனர். இதை கண்கூடாக காண முடிந்தது.
இந்த தேர்தலில் ம.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெற்று ஈழத்தமிழர்களை காக்க அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு ம.தி.மு.க.வை மக்கள் வெற்றி பெற செய்வார்கள். பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
மோடி அலை நாடு முழுவதும் வீசுகிறது. அவர் பிரதமர் ஆவார். பாரதீய ஜனதாவுடன் நாங்கள் நிபந்தனையின்றி கூட்டணி சேருகிறோம். நாங்கள் நிபந்தனை விதிக்கவில்லை. அவர்களும் நிபந்தனை விதிக்கவில்லை.
எங்கள் கட்சி பொதுக்குழு பிப்ரவரி 4–ந்தேதி கூடுகிறது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளை ஆய்வு செய்து முடிவு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருளாளர் மாசிலாமணி, ஆட்சி மன்ற குழு செயலாளர் கணேசமூர்த்தி எம்.பி., உறுப்பினர் புலவர் செவந்தியப்பன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கையை தயார் செய்ய தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் செந்தில்அதிபன், கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழக வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும், ஈழத்தை வென்றெடுக்க வேண்டும், ஊழல் களையப்பட வேண்டும் இதுவே எங்கள் கொள்கை. முதலில் ஈழத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது.
காங்கிரஸ் செய்த தவறை பாரதீய ஜனதா தலைவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு வாய்ப்பே வராது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் என்னென்ன அடிப்படை தேவைகள் அவசியம் என்பது பற்றி 3 மாதத்துக்கு முன்பே ஆய்வுப் பணியை தொடங்கி விட்டோம்.
சமீபத்தில் நான் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டேன். எப்போதும் இல்லாத அளவுக்கு வரவேற்பு இருந்தது. பிரசார பயணத்தின்போது வழியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தேன். இது ஒரு அரசியலில் ஆரோக்கியம் என்று நிருபர்களிடம் கருத்து தெரிவித்தேன். அதைத் தவிர வேறொன்றும் இல்லை.
சேது சமுத்திர திட்டத்தில் முன்பு சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிய கருத்து எழவில்லை. எனவேதான் நாங்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டோம். ஆனால் தற்போது சுற்றுச்சூழல் பற்றிய கருத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும், மீனவர்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது. பச்சோரி கமிஷன் அறிக்கையும் சுற்றுச்சூழல் பற்றி கவலை தெரிவித்து இருந்தது. எனவே சேதுசமுத்திர திட்டம் மறுபரிசீலனைக்கு உட்பட்டதுதான்.
இவ்வாறு வைகோ கூறினார்.

0 Responses to பாரதிய ஜனதாவுடன் ம.தி.மு.க. கூட்டணி: வைகோ பேட்டி