மக்களைக் கருத்தில் கொள்ளாமல் சர்வாதிகார ஆட்சியை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்றது. அது, வட கொரியாவின் ஆட்சிமுறையைப் தற்போதைய அரசாங்கம் பின்பற்றுவதற்கான அறிகுறியென்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையின் ஒரு பிரிவினர் மாத்திரம் லம்போகினி சொகுசு வாகனங்களில் பயணிக்கும் வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆனால், நாட்டு மக்கள் ஒருவேளை உணவுக்காகவே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு சிறிகொத்தாவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும்போதே பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜெயசூர்யா மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆடைத் தொழிற்சாலை துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதி துறையை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இதனிடையே, எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் பெயரிடவில்லை என்று அறிவித்த கரு ஜெயசூர்யா, வலிந்து யாரையும் முன்னிறுத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

0 Responses to வட கொரிய ஆட்சியை இலங்கையின் தற்போதை அரசாங்கம் பின்பற்றுகிறது: ஐ.தே.க குற்றச்சாட்டு