யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய புற்றுநோய் வைத்தியசாலையை மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் முக்கிய அதிதியாக கலந்து கொண்டார். அதோடு, புற்று நோய்க்கான புதிய சிகிச்சைக் கூடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல்லும் மஹிந்த மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரினால் நாட்டப்பட்டுள்ளது.
புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தெற்கின் மாத்தளையிலிருந்து வடக்கின் பருத்தித்துறை வரையில் நடை பயணத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியுதவியினைக் கொண்டே தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் ஆளும், எதிர்க்கட்சி வித்தியாசமின்றி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ் தெல்லிப்பளையில் புற்று நோய் வைத்தியசாலை மஹிந்த திறப்பு