யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றஞ்சாட்டின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘ஆவா’ என்கிற பெயரைத் தாங்கிய குழுவைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஆனாலும், ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருட்டு மற்றும் அடிதடி குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 06ஆம் திகதி யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் 13 பேரைக் கைது செய்திருந்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் கடந்த 17ஆம் திகதி நீதி விசாரணைகளுக்கான நீதிமன்றத்தில் பொலிஸாரினால் நிறுத்தப்பட்ட போது இருவருக்கு பிணை வழங்கப்பட்டது. மற்றவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே, இன்றை விசாரணைகளின் போது மிகுதியுள்ள 11 பேரில் எட்டுப் பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மற்றய மூவரையும் எதிர்வரும் மாதம் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
இதனிடையே, கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விசாரணைகளின் போது செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் சிலர் ஆவா குழுவினரால் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ‘ஆவா’ குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; எட்டுப் பேருக்கு பிணை