Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளின் மெயில் கணக்குகளை ஹேக் செய்து அதன் வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிளாக் பெர்ரி மாபைல் மூலம் மிகப் பாதுகாப்பான முறையில் உபயோகித்து வரும் மெயில் கணக்கிலுள்ள ஈ மெயில்களை ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் வாசித்துள்ளனர் என சனிக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வாசிக்கப் பட்ட மெயில்கள் அனைத்தும் வகைப் படுத்தப் படாத சாதாரண மெயில்கள் தான் எனவும் இவற்றில் பெரும்பாலும் அதிபர் ஒபாமாவின் நிகழ்ச்சி நிரல் மற்றும் தலைவர்களுடனான சந்திப்பு குறித்த மெயில்கள் மாத்திரம் தான் வாசிக்கப் பட்டுள்ளன எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும் அதிபரின் மெயில் ஹேக்கர்களால் ஊடுருவப் பட்டதே முக்கிய பாதுகாப்புக் குறைபாடு தான் எனக் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. எட்வர்ட் ஸ்னோவ்டென் விவகாரத்துக்குப் பிறகு அமெரிக்கா மீது உலகின் முக்கிய பிற இரு சக்திகளான சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் அதிகரித்த ஆத்திரம் காரணமாக அங்குள்ள கணணி ஹேக்கிங் நிபுணர்களுக்கு மறைமுக ஆதரவு பெருகி வருவதாக உலக அரங்கில் கணிக்கப் பட்டுள்ளது.

பெப்ரவரியில் அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனமான சோனியின் வலையமைப்புக்களை ஹேக் செய்து பல மில்லியன் டாலர்கள் இழப்புக்குக் காரணமாக இருந்ததாக வடகொரியா மீது அதிபர் ஒபாமா வெளிப்படையாகவே சைபர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கடந்த வருடம் ஒபாமாவின் மெயில் ரஷ்ய ஹேக்கர்களால் வாசிக்கப் பட்டது!:நியூயோர்க் டைம்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com