இரு நாடுகளுக்கு இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது மீனவர்கள் கைது செய்யப்படுவது என்பது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல் என்று
முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் மற்றும் அவர்களது 6 படகுகளை இலங்கை கடற்படை மீண்டும் சிறை பிடித்து உள்ளது. பின்னர் சிறை பிடித்த இவர்களை ஊர்காவல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி, யாழ் சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து பிரதமருக்கு இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் கடந்த திங்கட்கிழமை அன்றுதான் இரு நாட்டு மீனவப்பிரதிநிதிகள் இடையே நல்லிணக்கப் பேச்சுவர்த்தை முடிந்துள்ளது. மீண்டும் இந்த நல்லிணக்க பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளநிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது என்பது நல்லிணக்கப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையிலேயே இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே, இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்த 38 மீனவர்கள், மற்றும் அவர்களது 6 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடித்தத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to இரு நாடுகளுக்கு இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில் மீனவர்கள் கைது என்பது சீர்குலைக்கும் செயல்: ஜெயலலிதா