Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலானர் நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைககு விஜயம் செய்யவுள்ள நிலையினில் ஏட்டிக்குப்போட்டியாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சர்மாவும் வருகை தரவுள்ளார்.தனது பயணத்தின் ஓர் அங்கமாக நாளை தனது அதிகாரிகள் அறுவர் கொண்ட குழுவுடன் வருகை தரும் சுஜாதா சர்மா யாழ்ப்பாணத்திற்கும் இரண்டு நாள் விஜயம் செய்யவுள்ளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே  நிஷா தேசாய் பிஸ்வால் எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளத அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் அறிவித்துள்ளது.

போருக்கு பிந்திய நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இலங்கை அரச அதிகாரிகளை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது. தனது விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களை நிஷா தேசாய் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அமெரிக்க -இந்திய ராஜதந்திரிகள் அவசர விஜயம்! நிஷா தேசாய் பிஸ்வால் மற்றும் சுஜாதா சர்மா களத்தினில்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com