Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டு உளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, குஜராத்தில் இனக் கலவரம் நடந்து அப்பாவி மக்கள் படு கொலை செய்யப்பட்டதற்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று கூறியிருந்தார்.

இத்தகு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான பிரஃபுல் படேல், குஜராத் இனக்கலவரத்துக்கு மோடி காரணம் இல்லை என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி விட்டது. இதை ராகுல் காந்தி மறந்து விட்டு பேசுவது நியாயமில்லை என்று கூறியிருந்தார்.

இதனால் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுக்கு இடையே விரிசல் விழுந்து உள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணிக்குத் தயாராகி உள்ளதன் வெளிப்பாடே பிரஃபுல்  படேலின் இந்த வெளிபடையான பேச்சு என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

0 Responses to காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் உறவில் விரிசல்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com