ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத (ஜெனீவா) கூட்டத்தொடர் முடியும் வரையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை.
அப்படி செல்வோம் என்றால் அது, முட்டாள்தனமான முடிவாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே பல தடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆலய வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மோதல் காலங்களில் தமிழ் மக்கள் சர்வதேசத்தினால் கைவிடப்பட்டிருந்தனர். இப்போதாவது சர்வதேசம் தமிழ் மக்களுக்கு உதவும் என்று நினைக்கிறோம். எனவே, இப்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது சரியல்ல. அப்படிச் சென்றால் அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தங்கள் குறைந்துவிடும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to ஜெனீவா கூட்டத்தொடர் முடியும் வரை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை: த.தே.கூ