Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எப்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டாரோ அப்போதே தனது குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா தலைவர் ராஜ் தக்கரே தெரிவித்துள்ளார்.

அதோடு மோடி தனது மும்பை ஊர்வலத்தின் போது சர்தார் பட்டேலை மாத்திரம் புகழ்ந்து பேசியது ஏன் எனத் தெரியவில்லை. அவர் மாறாக சிவாஜியை பற்றியே பேசியிருக்க வேண்டும் என்றார். அதோடு மகாராஷ்டிராவில் குஜராத் சமூகம் குறித்து மோடி சொன்ன கருத்துக்களையும் ராஜ் தக்கரே விமர்சித்துள்ளார். முன்னதாக பாஜகவின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சிவசேனாவும் மோடியை விமர்சித்திருந்தது. இந்நிலையில் ராஜ் தக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா நவநிர்மாண சேனா கட்சியும் மோடியை விமர்சித்துள்ளது பாஜகவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ராஜ் தக்கரே, 'மோடி பிரதமராவதற்கு தகுதியானவர். நாம் அவருக்கு ஆதரவு தருவதில் மகிழ்வடைகிறோம்' எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் சிவ்சேனாவுடான் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக பாஜக இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மோடி குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் : ராஜ் தக்கரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com