Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது மேன்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணையை தொடங்கியது. இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, யுக் முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

அதற்கு முன்னர், மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் விசாரணையை தொடர உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து ராம்ஜெத் மலானி வாதாடினார். இத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பிலான வழக்கறிஞர்கள் வாதம் முடிவுக்கு வந்துள்ளது. எதிர்வரும் 4ம் திகதி மத்திய அரசு தனது தரப்பிலான வழக்கறிஞரைக் கொண்டு எதிர்வாதத்தை தொடங்கவுள்ளது. அதன் பின்னரே இவ்வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும்.

ஜனாதிபதி காலதாமதமாக முடிவு எடுத்ததால் தண்டனையை குறைக்கலாம் இன்று கடந்த 21–ந்தேதி வீரப்பன் கூட்டாளிகள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்தே ராஜீவ் கொலை வழக்கிலும் தீர்ப்பில் மாற்றம் நிகழலலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to ராஜீவ் கொலை வழக்கு : முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பிலான வாதம் முடிந்தது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com