Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனிப்பட முறையில் தாம் ஒரு போதும் மோடியை சந்தித்தது இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் சரத்பவார்.

தேசிய வாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார், குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதை திட்டவட்டமாக மறுத்துள்ள சரத்பவார், தாம் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் என்றுமே சந்தித்தில்லை என்றும், இது விஷமிகள் பரப்பிய வதந்தி என்றும் கூறியுள்ளார். நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரஃபுல் படேல், குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள நிலையில், ராகுல்காந்தி குஜராத் கலவரத்துக்கு மோடியே முழுமுதல் காரணம் என்று கூறுவது சரியல்ல என்று மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தது இவ்வேளை குறிப்பிடத் தக்கது.

0 Responses to தனிப்பட்ட முறையில் தாம் ஒரு போதும் மோடியை சந்தித்தது இல்லை:சரத்பவார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com