Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்டைப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் வேற்று ஜாதி பையன் ஒருவனை காதலித்த பெண்ணுக்கு அந்த ஊர் பஞ்சாயத்து, பாலியல் வன்கொடுமை என்பதை தீர்ப்பாக வழங்கி இருந்தது. அதன் படி அந்த பெண்ணை 13 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அம்மாநில அரசு இது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையில் கட்டைப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ள நிலையில்,  பஞ்சாயத்துக்கு தடைவிதிக்கத்  தேவையில்லை என்றும்,பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதர்காகவே  இப்படிப்பட்ட தண்டனை அப்பெண்ணுக்கு விதிக்கப் பட்டது என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி இருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரிடமும் கெஜ்ரிவாலின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி அரசியலில் கால் பதித்தத்தோடு  மட்டுமின்றி, இந்த பிரச்னையை முன் வைத்து  டெல்லியில் ஆட்சியை பிடித்த கெஜ்ரிவால் இப்படி கருத்து வெளியிட்டு இருப்பது என்பது, சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

0 Responses to கட்டைப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை:கெஜ்ரிவால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com