Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முசாபர்நகர் கலவரத்தின் போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களில் ஆறு பேர் தைரியமாக முன்வந்து காவ்துறையினரிடம் முறைப்பாடு செய்து நான்கு மாதங்களாகிவிட்டன.

ஆனால் இதுவரை எந்தவொரு காமுகனையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இது குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தொடர்கின்ற போதும், காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரில் இன்னமும் ஒரு சிலர் சுதந்திரமாக முசாஃபர் நகரில் புகானா கிராமத்தில் நடமாடி வருவதாக அங்கு சென்று வந்திருந்த ஐ.பி.என் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

வன்கொடுமைக்கு உள்ளாகி காவல்துறையினரிடம் முறையிட்ட ஆறு பேரில் இரு பெண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பெயர், அடையாளங்களையும் கொடுத்திருக்கின்றனர். ஆனால், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

'பூட்டிய அறையில் இருவர் வெளியே காவலுக்கு நிற்க இருவர் உள்ளே வந்து ஒருவர் பின் ஒருவராக பாலியல் வல்லுறவு புரிந்தனர். பொலிஸ் வருவதற்குள் காரியம் முடிந்தாக வேண்டும் என அவர்களுக்குள் சொல்லிக் கொண்டனர்' என பாதிக்கப்பட்ட பெண்ணில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கி.மீ தொலைவில் தான் காவல்துறை நிலையம் இருந்தது. ஆனால் இதுவரை எக்கைதும் மேற்கொள்ளப்படவில்லை. முசாபர் நகர் கலவரத்திற்கு காரணமானவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள், கொலை செய்தவர்கள், பாலியல் பலாத்காரம் புரிந்தவர்கள் என அனைவரும் சுதந்திரமாகவே வெளியில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்கள் முசாபர் நகர் காவல்துறையினரிடம் புகார் அளிக்க சென்ற போது, இப்பெண்களிடம் காவல்துறையினர், குறித்த சம்பவம் நிகழ்ந்த போது எவ்வாறான உடை அணிந்திருந்தீர்கள், எங்குவைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்கள், இதற்கு யார் சாட்சி என பல கேள்விகளை கேட்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனா 'இறந்தாலும் பரவாயில்லை. ஆனால் மீண்டும் முசாபர் நகருக்கு மாத்திரம் இனி செல்ல மாட்டோம்' என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

0 Responses to முசாஃபர்நகர் கலவரம் : இதுவரை பாலியல் குற்றவாளிகள் எவரும் கைதாகவில்லை?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com