Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கெடுத்தமையினையடுத்து பொது நிகழ்வொன்றில் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பங்கெடுக்க மறுத்திருந்த சம்பவமொன்று அராலி மாவத்தை பகுதியில் இன்று நடைபெற்றுள்ளது. வட- கிழக்கில் பொது நிகழ்வுகளில் அப்பகுதிப் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அழைக்க வேண்டுமென்பது எழுதப்படாதச் சட்டமாகவே உள்ளது. அவ்வகையில் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அழைக்கப்பட்டுள்ளார். அதே போன்று அப்பகுதிப் படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கெடுக்கும் நிகழ்வில் தாம் பங்கெடுக்க தயாரில்லையென தெரிவித்துள்ள படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அவரே தமக்குத் தற்போது எதிரியென தெரிவித்துள்ளதுடன் அவரை அழைக்காது விட்டால் தாம் வருகை தர தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதிலும் தமக்கு எதிராக அவர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கு ஏற்பாட்டாளர்கள் மறுதலித்து அனந்தி தலைமையினில் நிகழ்வினை நடத்தி முடித்துள்ளனர்.

0 Responses to அனந்தி வேண்டவே வேண்டாம்! இராணுவம் பொலிஸ் விடாப்பிடி!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com