திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று பகல் 2 மணி அளவில் மு.க.அழகிரி சந்தித்தார் எனத் தெரிய வருகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக, தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து மு.க.அழகிரி விமர்சனம் செய்ததாகவும், திமுக தலைவர் கருணாநிதி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும் இருந்தார். கட்சியின் நடவடிக்கைகளை விமர்சிப்பவர் யாராயினும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருந்தார்.
இதையடுத்தே இன்று கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி சந்தித்தார். , சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அழகிரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக, அழகிரி கலைஞரைச் சந்திக்கவில்லை, தாயார் தயாளுஅம்மாவை மட்டுமே சந்தித்து வந்ததாகவும் சில தகவல் தெரிவிக்கின்றன.

0 Responses to திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மு.க அழகிரி?